ஊழல், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் - ஆதவ் அர்ஜுனா அனல் பறக்க பேச்சு.!
Tamilspark Tamil March 29, 2025 07:48 AM

சென்னை திருவான்மியூரில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிர்வாகிகள் சுமார் 2500 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், உறுப்பினர்களுக்கு காலை, மதியம் என 2 வேலை அறுசுவை சைவ உணவுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ், "இனி அனைவர்க்கும் விஜய் தளபதி இல்லை. வெற்றித்தலைவர். நாம் பலம்பொருந்திய உட்கட்டமைப்புடன் தேர்தல் என்ற போருக்கு தயாராகி இருக்கிறோம். ஊழல் செய்யும் அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தை தூக்கியெறிய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க:

ஊழல் கட்சிகள்

அரசியலுக்கு வர ஆண்டுக்கு பலநூறு கோடிகள் வருமானமாக கிடைக்கும் திரைத்துறையின் சாதனையை புறந்தள்ளி, விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். உங்களின் (ஊழல் கட்சிகளை சொல்கிறார்) சம்பாத்திய அரசியலுக்கு நாங்கள் வரவில்லை. நாங்கள் ஊழல் செய்து எந்த பணத்தையும் சேர்த்து வைக்கவில்லை.

போருக்கு தயாராகிறோம்

விஜய் இனி தளபதி இல்லை-வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம்.அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். உங்கள் அரசியல் சம்பாதிக்கும் அரசியல். நாங்கள் ஊழல் செய்து லண்டன் சென்று ஊழல் பணத்தை செலவு செய்யவில்லை.

உண்மையாக இருங்கள்

எம்.ஜி.ஆர் அவர்களை இழிவுபடுத்தி, அவரின் ஆட்சியில் நீங்கள் வீட்டில் இருந்தீர்கள். அதேபோல, திமுகவின் தற்போதைய அமைச்சரவை ஓய்வுக்கு தயாராகிறது. பிரசாந்த் கிஷோர் குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. திமுகவுக்காக களமிறங்கி வேலை பார்ப்பவர் அண்ணாமலை தான். மோடிக்கு உண்மையாக அண்ணாமலை செயல்பட வேண்டும்.

சாதியை வளர்த்த திமுக:
தவெகவில் சாதி இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக சாதியை வளர்த்து அரசியல் செய்ததே திமுக தான். திமுகவில் சாதிகள் இருக்கின்றன. அரசியலிலும் சாதியை கொண்டு வந்தது திமுக தான். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை. 10 மானிய கோரிக்கைகள் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட்டது எப்படி. கலைஞர் காலத்தில் இல்லாத திரிபு வரலாறுகளை சாதனை என சோதனையாக செய்து வருகின்றனர்" என பேசினார்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.