கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டம், பேகுரு கிராமத்தில் நடந்த நான்கு பேர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிஷ் (வயது 35) என்ற நபர், தனது மனைவி நாகி (வயது 30), ஐந்து வயது மகள், மாமனார் கரியா (வயது 75) மற்றும் மாமியார் கௌரி (வயது 70) ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. கொலையின் பின்னணி விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கிரிஷ் மற்றும் நாகி திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. குடும்பத்திலுள்ள உள் மோதல், சொத்து தகராறு அல்லது வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்பதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கிரிஷ் மீது கொலைக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விரைவில் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
குற்றவாளியை பிடிக்க பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குடும்ப கொலை வழக்கு, கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.