2026ஆம் ஆண்டு தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலாக, சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதிமுக ஸ்டாலின் முதலிடம், விஜய் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் எழுச்சியுடன் முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில், 2026 தேர்தலில் மக்கள் யாரை முதல்வராக விரும்புகிறார்கள் என்பதை கண்டறிய சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இதில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 27% ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 18% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10% ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9% வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள திமுகவே மீண்டும் தேர்தலில் மேலோங்கும் வாய்ப்பு உள்ளது என இந்த கருத்துக்கணிப்பு முன்வைக்கிறது. அதேசமயம், அரசின் செயல்பாடுகளைப் பற்றிய கருத்துக்கணிப்பில், 15% மக்கள் மிகுந்த திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 36% பேர் ஓரளவிற்குத்தான் திருப்தி என்றுள்ளதோடு, 25% பேர் தங்களுக்குத் திருப்தி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். 24% பேர் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்துள்ளனர்.
Edited by Mahendran