மனோஜ் மன உளைச்சல்லதான் இறந்தார்னு யாரு சொன்னா?!.. பொங்கிய இயக்குனர்!….
CineReporters Tamil March 29, 2025 06:48 PM

Manoj Bharathiraja: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோதே மரணமடைந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெகுநேரமாகியும் அவர் படுக்கையிலிருந்து எழவில்லை என்பதால் அவரின் மனைவி சென்ற பார்த்தபின்னர்தான் அவர் மரணமடைந்தது தெரிய வந்திருக்கிறது.

மனோஜ் வசிப்பது சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில். அவரின் அப்பா பாரதிராஜா நீலாங்கரையில் தனி வீட்டில் வசித்து வருகிறார். மனோஜின் அம்மாவும் தனி வீட்டில் வசித்து வருகிறார். எல்லோருக்கும் இடையே மனஸ்தாபங்கள் இருந்திருக்கிறது. ஆனாலும், அப்பாவை போய் அடிக்கடி பார்ப்பது, அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது என அன்பாகவே இருந்திருக்கிறார் மனோஜ்.

தாஜ்மகால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய மனோஜுக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது. ஆனால், அது நடக்கவில்லை. பல படங்களில் நடித்தும் அவரை ஹீரோவாக மக்கள் ஏற்கவில்லை. எனவே, அவர் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்பட்டது.

Perarasu

அதோடு, குடும்பத்தில் பிரச்சனை, சொத்து பிரிப்பதில் பிரச்சனை, கடன் பிரச்சனை, சினிமாவில் ஜெயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் என பல விஷயங்களால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. அதோடு, துரித உணவு என சொல்லப்படும் Junk Food பழக்கத்தால் கொழுப்பு அவரின் இதயத்தில் சேர்ந்ததால் 3 வாரங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது.

இது எல்லாம் சேர்ந்துதான் தூக்கத்தில் அவரின் உயிர் பிரிந்திருப்பதா கருதமுடிகிறது. இந்நிலையில், மன உளைச்சலால் மனோஜ் இறக்கவில்லை என இயக்குனர் பேரரசு சொல்லியிருக்கிறார். மானோஜ் பாரதிராஜா மன உளைச்சலால் இறந்துட்டாருன்னு பலரும் சொல்றாங்க. அதில் உண்மை இல்லை. எனக்கு மன உளைச்சல் என அவர் உங்களிடம் ஏதேனும் பகிர்ந்து கொண்டாரா?.. நான் அவரின் அலுவலகத்திற்கு அடிக்கடி போயிருக்கிறேன். எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமாகவே இருப்பார். அவரின் மறைவுக்கு உடல்நிலைதான் காரணமே தவிர மனநிலை இல்லை. தேவையில்லாமல் பழி சுமத்தக் கூடாது’ என சொல்லியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.