பொதுவாக சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பதிவிடும்போது திடீரென அது ஓவராக டிரெண்டாகி விடுகிறது. அப்படித்தான் தற்போது நாடு முழுவதும் கிப்லி புகைப்படங்கள் டிரெரண்டாகி வருகிறது. முன்னதாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் போட்டி நடைபெறும் போது விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனியின் போட்டோவை கிப்லி வடிவில் மாற்றி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதேபோன்று பலரும் தற்போது கிப்லியில் புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
இது ஓவராக ட்ரெண்டாவதால் தங்கள் ஊழியர்கள் தூக்கமின்றி சிரமப்படுவதாகவும் சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் வேதனை தெரிவித்துள்ளார். அதாவது திடீரென பிரபலங்கள் முதல் பயனர்கள் வரை அனைவருமே கிப்லி புகைப்படங்களை ட்ரெண்ட் செய்வதால் அதன் சாஃப்ட்வேரை முடங்குகிறது.இது தங்கள் ஊழியர்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவதாக சாட்ஜிபிடி சிஇஓ வருத்தம் தெரிவித்துள்ளதோடு இது பைத்தியக்காரத்தனம் என்றும் சாடியுள்ளார்.
அதோடு பயனர்கள் அமைதிக்காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஜப்பானில் பிரபல அனிமேஷன் ஸ்டுடியோவான கிப்லி அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. இதன் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றே நிஜ உலக மனிதர்கள் தங்கள் போட்டோக்களை மாற்றி மகிழ்கிறார்கள். மேலும் பொது மக்களின் இந்த கட்டுக்கடங்காத ஆர்வம் மற்றும் கிப்லி புகைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி தங்களை மன வேதனைக்கு ஆளாக்குவதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.