#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs மும்பை – மும்பை – 31.03.2025
மும்பை அணியின் முதல் வெற்றிமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணியை (16.2 ஓவரில் 116, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 26, ரமந்தீப் சிங் 22, மனீஷ் பாண்டே 19, ரிங்கு சிங் 17, அஷ்வினி குமார் 4/24, தீபக் சாஹர் 2/19, ட்ரெண்ட் போல்ட், ஹார்திக் பாண்ட்யா, விக்னேஷ் புதூர், மிட்சல் சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (12.5 ஓவரில் 121/2, ரியான் ரிக்கிள்டன் 62, சூர்யகுமார் யாதவ் 27, ரோஹித் ஷர்மா 13, வில் ஜேக்ஸ் 16, ஆண்ட்ரே ரசல் 2/35) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஏராளமான அதிரடி மட்டையாளர்களைக் கொண்ட கொல்கொத்தா அணி மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மும்பை அணிக்காக நேற்று முதன் முறை களமிறங்கிய அஷ்வின் குமார், 3 ஓவர்கள் வீசி, 24 ரன் கள் கொடுத்து 4 விக்கட்டுகள் சாய்த்தார்.
கொல்கொத்தா அணியில் நாலு வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்றவர்களான கிவிண்டன் டி காக் (1 ரன்), சுனில் நரேன் (பூஜ்யம் ரன்), வெங்கடேஷ் ஐயர் (3 ரன்), ஆண்ட்ரூ ரசல் (5 ரன்), ஹர்ஷித் ராணா (4 ரன்), ஸ்பென்சர் ஜான்சன் (1 ரன்) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் குஜராத் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 116 ரன் மட்டுமே எடுத்தது.
117 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (12 பந்துகளில் 13 ரன்) எடுத்து ஆட்டமிழந்தார். இவர் தொடக்கத்தில் அணியில் இடம்பெறவில்லை. பின்னர் இம்பாக்ட் பிளேயராக மட்டையாட வந்தார். அவரோடு களமிறங்கிய ரியன் ரிக்கிள்டன் (41 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), அவருக்குப் பின் வந்த வில் ஜேக்ஸ் (17 பந்துகளில் 16 ரன்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (9 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோரின் அதிரடியாக ஆடியதால் மும்பை அணி 12.5 ஓவர்களிலேயே இரண்டு விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பேட்டிங் பவுலிங் இரண்டிலும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் மும்பை அணி தடுமாறுகிறது. ரோஹித் ஷர்மா ஃபார்மில் இல்லை. பும்ரா இல்லாத குறை பந்துவீச்சில் தெரிகிறது.
அணியின் வேகப் பந்துவீச்சாளர் அஷ்வின் குமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
News First Appeared in