#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs குஜராத் – பெங்களூரு – 02.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (169/8, லியம் லிவிங்க்ஸ்டோன் 54, ஜிதேஷ் ஷர்மா 33, டிம் டேவிட் 32, பில் சால்ட் 14, ரஜத் படிதர் 12, சிராஜ் 3/19, சாய் கிஷோர் 2/22, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (17.5 ஓவரில் 170/2, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 73, சாய் சுதர்ஷன் 49, ரூதர்ஃபோர்டு ஆட்டமிழக்காமல் 30, ஷுப்மன் கில் 14, புவனேஷ் குமார் 1/14, ஹேசல்வுட் 1/23) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் முதல் நான்கு மட்டையாளர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பில் சால்ட் (14 ரன்), விராட் கோலி (7 ரன்), தேவதத் படிக்கல் (4 ரன்), ரஜத் படிதர் (12 ரன்) ஆகிய நால்வரும் 6.2 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர், லியம் லிவிங்க்ஸ்டோன் (50 பந்துகளில் 54 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஜிதேஷ் ஷர்மா (21 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), கடைசியாக டிம் டேவிட் (18 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் மோசமான நிலையில் இருந்த பெங்களூர்உ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 என முடிந்தது.
170 என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் (14 பந்துகளில் 14 ரன்) மட்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற ஆட்டக்காரர்களான சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 49 ரன்), ஜாஸ் பட்லர் (39 பந்துகளில் 73 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) ஷிஃபான் ரூதர்ஃபோர்டு (18 பந்துகளில் 30 ரன், 1 ஃபொர், 3 சிக்சர்) ஆகியோர் மிகப் பிரமாதமாக ஆடி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
குஜராத் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
News First Appeared in