வெயிலில் குளிர்ந்த பானங்களை பருகும் சவாலை தீர்க்கும் வகையில், வேல்ஸைச் சேர்ந்த முன்னாள் பார்டெண்டர் ஜேம்ஸ் வைஸ் (31) உலகின் முதல் வணிகரீதியில் செயல்படக்கூடிய ‘சுயகுளிரூட்டும்’ டின்கேனை உருவாக்கியுள்ளார். “கூல் கேன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பில், டின் கனின் அடிப்பகுதியில் சிறிதளவு நீரும், அதை அடுத்துள்ள நீளமான பகுதியில் உப்பும் உள்ளன. பாட்டனைக் அழுத்தும்போது இரண்டும் சேர்ந்து வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி பானத்தை உடனடியாக குளிரவைக்கின்றன.
இந்த டின்கேன் பார்ப்பதற்கு சாதாரண 500மில்லி கேனாக இருந்தாலும், உள்ளே பானம் 350மில்லி மட்டுமே இருக்கும். ஏனெனில் அதன் உள் பகுதி குளிரூட்டும் அமைப்புக்காக தனி இடமாக விட்டுவைக்கப்பட்டுள்ளது. கோகா கோலா, ரெட் புல், AB InBev போன்ற பிரபல பான நிறுவனங்கள் இதைப் பற்றிய ஆர்வத்தை காட்டியுள்ளதாக ஜேம்ஸ் வைஸ் கூறுகிறார்.
500க்கும் மேற்பட்ட மாதிரிகள் மற்றும் இரண்டாண்டு தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த டின்கேன், குறைவான இடங்களில் குளிர்சாதன வசதி உள்ள பகுதிகளில் மிகப்பெரிய பயன்பாட்டைக் கொண்டுவரும். ஐக்கிய நாடுகள் தெரிவிப்பின்படி உலகளவில் 17% மின் செலவைக் குளிர்சாதனமே எடுத்துக் கொள்கிறது என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய புதிய கண்டுபிடிப்பாகும்.