துருக்கியின் பிரபல பாடகர் வோல்கன் கோனக், சைப்ரஸில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக மருத்துவக் குழுவால் உடனடியாக முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஃபமகுஸ்தா மாநில மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், அவருக்கு 40 நிமிடங்கள் CPR சிகிச்சை வழங்கப்பட்டும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும், 12:42 மணிக்கு மரணம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு துருக்கி முழுவதும் இசை ரசிகர்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இவருடைய மறைவு துருக்கி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வடக்கு மகன் என புகழப்பட்ட அவர் துருக்கி கலாச்சாரத்தையும் கருங்கடல் இசையையும் உலக அளவில் கொண்டு சென்றவர் என்பதால் அவருடைய மரணம் ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.