தெலுங்கானாவின் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரிய தேவ். இவர் மூன்று வருடங்களாக லால் தேவி என்ற பெண்ணை காதலித்து வந்தார். அதே சமயம் ஜல்கர் தேவி என்ற பெண்ணையும் சூரியதேவ் காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சூரிய தேவுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்வதற்கு இரண்டு பெண்களுமே சம்மதம் தெரிவித்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி ஒரே மேடையில் வைத்து சூரிய தேவ் தான் காதலித்த லால் தேவி ஜல்கர் தேவி ஆகிய இருவரையும் திருமணம் செய்துள்ளார்.