வாரணாசி கேன்ட் அருகே உள்ள சந்தை பகுதியில் மூன்று எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பகலில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை 8 மணி அளவில் கட்டணப்பாலத்துக்கு கீழே தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஏராளமான கடைகள் இருந்தது. அந்த சமயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பேரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.