குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள உச்சர்பி கிராமம் அருகே, ஒரு தனியார் விமான பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த பயிற்சி விமானம் திங்கட்கிழமை மாலை தொழில்நுட்ப கோளாறால் திறந்த நிலத்தில் அவசர தரையிறக்கம் செய்ததில், அதில் பயிற்சி பெற்று வந்த பெண் விமானி லேசாகக் காயமடைந்தார்.
“>
மெஹ்சானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், தொழில்நுட்ப காரணங்களால் தரையிறங்கும் முயற்சியில் விபத்து ஏற்பட்டு, உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுகாதார மற்றும் அவசர சேவைத்துறை குழுக்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“>