குட் நியூஸ்..! மதுரையில் எய்ம்ஸ் 3 ஆண்டுகளில் நிறைவடையும் : ஜெ.பி. நட்டா
Newstm Tamil April 02, 2025 11:48 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெ.பி. நட்டா பதிலளித்தார்.அப்போது நிதி பிரச்னையால் எய்ம்ஸ் பணிகள் தாமதமானது என்றும், தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெறுவதாகவும், மத்திய அரசு நிதி வழங்குவதில் ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை என்று ஜெ.பி நட்டா தெரிவித்தார்.

மதுரை தோப்பூரில் 220 ஏக்கரில் எய்ம்ஸ் வளாகத்தின் கட்டுமானம் 2024 மே 22 ல் துவங்கியது. கட்டுமான திட்டத்தின் மதிப்பு ரூ.2021 கோடி. இரண்டு கட்டங்களாக கட்டுமானம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கல்வி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டடங்கள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 24 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடமே இல்லாத நிலையில் அட்மிஷன் மட்டும் நடந்தது தொடர்பாக ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியது. நிதி பிரச்சினையால் எய்ம்ஸ் பணிகள் தாமதமானது, தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசு நிதி வழங்குவதில் ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை என மாநிலங்களவையில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பதில் அளித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.