“2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்”… மனநலம் சரியில்லை எனக் கூறி விடுதலை செய்த நீதிமன்றம்.. !
SeithiSolai Tamil April 05, 2025 04:48 PM

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2024ஆம் ஆண்டு தனது இரு சிறிய குழந்தைகளை குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துத் தற்கொலை செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயதுடைய நயோமி எல்கின்ஸ், இக்குற்றச்சாட்டில் மனநலக்குறைவு காரணமாக குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவத்தில், 1 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.

நீதிமன்றத்தில் மனநல மருத்துவர் ஜியானி பீரெல்லி சாட்சி அளித்தபோது, நயோமி எல்கின்ஸ் தன்னை ஒரு கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று நம்பியிருந்ததாகவும், உலகத்தில் உள்ள தீமைகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தனது குழந்தைகளை கொன்றதாகவும் தெரிவித்தார்.

குழந்தைகளை கொன்றபோது, எந்தவிதமான பாச உணர்வுமின்றி செய்துள்ளதையும் மனநல சிக்கல்களால் இந்த முடிவுக்கு வந்திருப்பதையும் குறிப்பிட்டார். சிறிய குழந்தையின் மார்பில் குத்தப்பட்ட காயமும் மருத்துவ ஆய்வில் உறுதியாகியுள்ளது.

நீதிபதி கீ பி. ரயன் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும்போது, நயோமி எல்கின்ஸுக்கு தண்டனை விதிக்க முடியாது என்றும், இரண்டு குழந்தைகளையும் கொன்ற போது அவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருந்தார் என்பதால், அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அமெரிக்க மாநில சட்டத்தின் கீழ், அவருக்கு தலா 75 ஆண்டுகள் என இரண்டு ஆயுள் தண்டனையாக மனநல மருத்துவமனையில் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளார். தன்னை மற்றும் பிறரை பாதிக்காத நிலைக்குப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளியே வர முடியும் எனவும் கூறப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.