மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது 29 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால் அந்த சிறுமி கற்பம் அடைந்துள்ளார். இந்த வழக்கில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அந்த 29 வயது நபரின் குடும்பம் செய்து கொடுத்து உதவியாக இருந்து வந்துள்ளார்கள். அந்த குடும்பத்தாரும் பீகாரில் உள்ள சிறுமியின் பூர்வீக கிராமத்தை சேர்ந்தவர்தான்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றிருந்த அந்த சிறுமிக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமி தனக்கு நடந்த அனைத்து விஷயத்தையும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் குற்றச்சாட்டப்பட்ட அந்த நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.