தெலுங்கானா பள்ளிகளில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக கூறி ஹைதராபாத்தில் சிபிஎஸ்இ, தனியார் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது மொழியாக ஹிந்தி கற்று வருவதாகவும், தெலுங்கு வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். CBSE, ICSE உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் என அண்மையில் தெலுங்கானா அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.