டெல்லியில் ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த நிகில்- பிரியங்காவுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் பிப்ரவரி 2026 இல் திட்டமிடப்பட்டது. நொய்டாவில் உள்ள ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரியும் பிரியங்கா, நிகிலை மணப்பதற்கு முன்பு அவருடன் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கபாஷெரா அருகே உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வாட்டர் பார்க்கிற்கு நிகில்- பிரியங்கா ஜோடி சென்றனர். அப்போது ரோலர் கோஸ்டரில் சென்றுகொண்டிருந்தபோது, உயரத்தில் இருந்த பிரியங்கா நெட் உடைந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, நிகில், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.