எம்.ஏ. பேபி சிபிஐஎம் பொதுச் செயலாளராக நியமனம்!
Dinamaalai April 06, 2025 11:48 PM

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு  நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் அகில இந்தியப் பொதுச்செயலாளராக கேரளத்தில் வசித்து வரும்  எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில், புதிய  பொது செயலாளரை கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பிரிவில் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார்.  எம்.ஏ. பேபி கேரளாவில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். நம்பூதிரி பாட் -க்கு பிறகு இதே பதவிக்கு வரும் கேரளாவைச் சேர்ந்த 2வது நபர் எம்.ஏ. பேபி என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.