மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவன் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென அருகிலுள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு அதிகாலை 7.30 மணிக்கு சென்றுள்ளார்.
அங்கு சில மணி நிமிடங்கள் அங்குமிங்கும் நடந்து சென்று கொண்டிருந்த மாணவர் தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கினார். பின்னர் யாரும் பார்க்காததை கவனித்துக் கொண்டே திடீரென 4வது மாடியில் இருந்து குதித்து விட்டார். இதில் அந்த மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்த போது மாணவன் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.