குஜராத்தின் வடோதரா நகரத்தில், 16 வயதுடைய வகுப்பு 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் அவரது தாய் வேலைக்காக அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றிருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பியபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தகவல் அளிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
மாணவியின் அறையில் இருந்து, தாயாருக்கு எழுதிய தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “அம்மா, உன் மகள் உன் கட்டுப்பாட்டில் இல்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
நான் போகிறேன்” எனவும், “சின்ன தம்பியை பார்த்துக்கொள், லவ் யூ அம்மா” எனவும் எழுதியிருந்தது. தாயார் காவல்துறைக்கு தெரிவித்ததாவது, தனது மகளை இரண்டு நாட்களுக்கு முன், தோழியுடன் அடிக்கடி வெளியே போவது குறித்து கண்டித்ததாக கூறியுள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.