“சமாளிக்க முடியல…” ரூ.1.8 கோடி சம்பளம் போதாமல் புலம்பும் வாலிபர்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா…?
SeithiSolai Tamil April 06, 2025 07:48 PM

இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் செயல்படும் முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் ஆஸ் வோரா ஜெயின் என்ற நிபுணர், தன்னுடைய உயர் சம்பளத்தையும் மிஞ்சும் செலவுகளையும் பற்றி லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளம் கிடைக்கும் என்றாலும், வரி பிடித்தபின் அவரிடம் கிடைக்கும் தொகை ரூ.1 கோடியாகவே இருப்பதாகவும், அதாவது மாதம் சுமார் ₹8.3 லட்சம் தான் கைக்கு வந்து சேரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் செலவுகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கின்றன. மாதம் ₹1.5 லட்சம் வீட்டு வாடகைக்கு செலுத்த, ₹80,000 கார் ஈஎம்ஐக்கு செலுத்துகிறார்.

மேலும், ஃபுட் டெலிவரி செயலிகள், ஹோட்டல் உணவுகள், பிரீமியம் வகை உடைகள் மற்றும் வைன்கள், ஜிம் சந்தா உள்ளிட்டவற்றுக்கு மட்டும் மாதத்திற்கு ₹8.87 லட்சம் செலவு செய்வதாகவும், தன்னுடைய சம்பளத்தை விட ₹57,000 அதிகம் செலவழிக்க நேரிடுகிறது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலர் இவரது வாழ்க்கை முறைதான் அதிக செலவுக்கு காரணம் என கூறி கருத்து பதிவு செய்துள்ளனர். “இந்த நகரம் உங்களை இவ்வளவு செலவழிக்கச் சொன்னதில்லை, நீங்கள் தான் அந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” என ஒருவர் விமர்சித்துள்ளார்.

மற்றொருவர் “30,000 சம்பளத்தில் கூட சந்தோஷமாக வாழும் மக்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள்” என பகிர்ந்துள்ளார். உயர்ந்த சம்பளமிருந்தும், செலவுப் பழக்க வழக்கத்தால் சேமிப்பு இல்லாத நிலை இப்போது பலருக்கும் சிந்திக்க வைத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.