தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இலங்கையில் இருந்து திரும்பி வரும் வழியில் ராமர் பாலம் தரிசனம் கிடைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணிக்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பத்கிர்ந்துள்ள பிரதமர் மோடி, “சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
தெய்வீக தற்செயல் நிகழ்வாக, அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அது நடந்தது. இரண்டையும் தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளார். அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.