வரத்து அதிகரித்ததால் மீன் விலை குறைவு... குவிந்த பொதுமக்கள்!
Dinamaalai April 06, 2025 09:48 PM

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமுடன் மீன் வாங்கி சென்றனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் சனிக்கிழமைதோறும் கரை திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்துக்கு கரை திரும்பினர்.

இதனால் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அவற்றை பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். விசைப்படகு மீனவர்களில் பெரும்பாலானோர் போதிய மீன்பாடு இல்லாததால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக மீன்களின் விலை சற்று உயர்ந்தது. மீன்களின் வரத்து அதிகரித்தாலும், அவற்றுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பனையானது. விளை மீன், ஊழி மீன், பாறை மீன் ஆகியவை கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், மயில் மீன், கேரை மீன், சூரை மீன் ஆகியவை கிலோ ரூ.200 வரையும், நண்டு கிலோ ரூ.550 வரையும் விற்பனையானது.

இதேபோல் ஏற்றுமதி ரகம் வாய்ந்த பண்டாரி மீன் கிலோ ரூ.800 வரையும், தம்பா மீன், கலவா மீன், செம்புளி மீன் ஆகியவை கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனையானது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.