“இந்த மசோதாவை நிச்சயம் ஏற்கனும்”… இல்லனா ஜெயில் கன்பார்ம்… துணை முதல்வர் கடும் எச்சரிக்கை..!!
SeithiSolai Tamil April 06, 2025 09:48 PM

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு அந்த மசோதா கடந்த புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாநிலங்கள் அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த மசோதாவுக்கு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்ததால் அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகி உள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் விஜயகுமார் சின்ஹா, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேச துரோகிகள் என்று பேசினார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த அவர் கூறியதாவது வக்பு மசோதாவை ஏற்க மாட்டோம் என்று கூறுபவர்கள் சிறைக்கு செல்பவர் செல்வார்கள்.

இது பாகிஸ்தான் இல்ல, இந்துஸ்தான். இது நரேந்திர மோடியின் அரசு. வக்பு மசோதா பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.