அமெரிக்காவில் நான்கு மாத குழந்தை காரில் இருப்பதை மறந்து அவரது தந்தை கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது 4 மாத குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் தனது குழந்தையை பராமரிப்பாளரிடம் விட மறந்து காரில் வைத்து பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். குழந்தை வரவில்லை என பராமரிப்பாளர் கூறிய பிறகுதான் அவருக்கு தனது குழந்தை காரில் இருப்பது ஞாபகம் வந்தது.
அங்கு சென்று பார்த்தபோது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அந்த நபர் அவராகவே காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.