மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் ஊழியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்கு உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விழா மேடையில் சத்யா நாடெல்லா, பில் கேட்ஸ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இருந்த போது எழுந்து நின்று படுகொலைக்கு உதவி செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமே உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது என்று குரல் எழுப்பினார் வனியா அகர்வால்.
பின்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார் வனியா அகர்வால். கடந்த ஆண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைக்ரோசாஃப்ட் நிறுவன வளாகத்தில் நினைவஞ்சலி நடத்திய இரண்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அது நிறுவனத்தின் உள் நடவடிக்கை விவகாரம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொன்விழா கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீன நாட்டின் மீது போர் தொடுக்கும் இஸ்ரேல் நாட்டிற்கு உதவி செய்வதைக் கண்டித்து வனியா அகர்வால் எழுப்பிய குரல் உலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.