“20 முறை திருமணம் ஆகியும் இன்னும் கன்னியாகவே இருக்கும் இளம் பெண்”.. குழப்பமாக இருக்கிறதா..? இதுவும் ஒரு பிசினஸ் தான்..!!
SeithiSolai Tamil April 08, 2025 03:48 PM

சீனாவில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்து பெண் ஒருவர் பணம் பெற்றுள்ளார். சீனாவில் சியாவ் மெய் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் சார்ந்த சமூக அழுத்தங்களால் அவதி பெறும் ஆண்களுக்கு உதவ மணப்பெண்ணாக நடிக்கின்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு நண்பர் ஒருவருக்கு உதவ அவரது பெற்றோர் முன்னிலையில் காதலியைப் போல நடிக்க அவர் ஒப்புக்கொண்டார்.

அதேபோன்று அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆண்கள் பலர் நாட்டில் உள்ளதை அறிந்த அவர் பணம் சம்பாதிக்க இது நல்ல வழி என்று அவர் நினைத்தார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது சந்தேகம் வராமல் இருக்க முதலில் மணமகனின் குடும்பத்தாரை திருமணத்திற்கு முன்பு சந்திப்பார்.

அதன் பின் திருமணத்தில் முகம் மலர்ச்சியுடன் மணப்பெண் அலங்காரத்தில் இருப்பார். அவ்வாறு நடிக்க அவர் சுமார் 20 வெள்ளி பெறுவதாக கூறுகின்றனர். சீனாவில் மணமக்களின் பெற்றோராக நடிப்பதற்கும் பலர் இருப்பதாக கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.