அதிர்ச்சி….! நடுரோட்டில் தெருநாயை சுட்டு கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil April 10, 2025 12:48 AM

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. நேற்று காலை பிரதீப் பாண்டே என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது ஒரு தெரு நாய் அவரை ஓட ஓட விரட்டி உள்ளது. இதனால் கோபமடைந்த பிரதீப் வீட்டிற்கு சென்று உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து வந்து நடுரோட்டில் அந்த நாயை சுட்டு கொலை செய்தார்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. தெரு நாய் சுட்டுக்கொலை செய்த பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.