IPL 2025: பெங்களூரு அணியை ஆட்டம் காட்டிய கே.எல். ராகுல்!
Dhinasari Tamil April 11, 2025 06:48 AM

#featured_image %name%

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs டெல்லி
சின்னசாமி மைதானம் பெங்களூரு – 10.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை (163/7, பில் சால்ட் 37, டிம் டேவிட் 37, ரஜத் படிதர் 25, விராட் கோலி 22, க்ருணால் பாண்ட்யா 18, நிகம் 2/18, குல்தீப் யாதவ் 2/17, முகேஷ் குமார், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கட்) டெல்லி கேபிடல்ஸ் அணி (17.5 ஓவர்களில் 169/4, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 93, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 38, அக்சர் படேல் 15, புவனேஷ் குமார் 2/14, யஷ் தயாள் 1/22, சுயேஷ் ஷர்மா 1/13) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (17 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விராட் கோலி (14 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர்.

நாலாவது ஓவரில் பில் சால்ட் ரன் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த ரஜத் படிதர் (23 பந்துகளில் 25 ர்ன, 1 ஃபோர், 1 சிக்சர்) கோலியுடன் இணைந்து ஆடினார். ஆயினும் ரன் விரைவாகச் சேர்க்கமுடியவில்லை.

லியம் லிவிங்க்ஸ்டோன் (4 ரன்) மற்றும் ஜிதேஷ் ஷர்மா (3 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை. இருப்பினும் இறுதியில் க்ருணால் பாண்ட்யா (18 பந்துகளில் 18 ரன்) மற்றும் டிம் டேவிட் (20 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) இருவரின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது.

164 ரன் என்ற இலக்கை எதிர்கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டியு பிளேசிஸ் (2 ரன்), ஜேக் மெகர்க் (7 ரன்), அபிஷேக் போரல் (7 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் அதற்குப் பின்னர் ஆட வந்த கே.எல். ராகுல் (53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன், 7 ஃபோர், 6 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அவருடன் இணைந்து அக்சர் படேல் (11 பந்துகளில் 11 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடி அணிக்கு 17.5 ஓவர்களிலேயே வெற்றியைத் தேடித்தந்தனர்.

டெல்லி அணியின் மட்டையாளர் கே.எல் ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.