“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!
SeithiSolai Tamil April 18, 2025 06:48 PM

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார்.

எழுத்துப்பாடுகளை புரிந்துகொள்ள முடியாத நிலையில், Google Translate பயன்படுத்தி பதில்களை அமைத்துள்ளார். சில மாதங்களில் அவர்கள் காதலித்த நிலையில், அந்தப் பெண் மற்றொரு ஆணுடன் பேசுவதை பார்த்த ரிஸ்வான் கடும் கோபமடைந்தார்.

கடந்த திங்கள் அன்று இரவு 8 மணியளவில், GTB எங்க்ளேவ் பகுதியில் உள்ள கொடியா காலனிக்கு அருகே அந்த பெண்ணை சந்திக்க அழைத்தார். அப்போது, மற்ற ஆணுடன் பேசுவதை நிறுத்தும்படி மீண்டும் கேட்டார்.

அவர் மறுத்ததையடுத்து, கையிலிருந்த துப்பாக்கியை பயன்படுத்தி அவரது தலையும் மார்பிலும் இரண்டு துப்பாக்கி சூடு நடத்தி, சம்பவ இடத்திலேயே அவரை கொன்றுவிட்டு தப்பிச் சென்றார். இந்தக் கொலைக்குப் பின், சிசிடிவி காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் ஹரியானா மாநிலம் கர்னாலில் இருந்து ரிஸ்வானை கைது செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.