தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று ஏப்ரல் 18ம் தேதி வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஏப்ரல் 17ம் தேதி வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, 8,920 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8945க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.71,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.