ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் கொத்தவூர் பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆளையில் பட்டாசு தயாரிக்கும் போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.