கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் கூறியதாவது, மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு..?
அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல் என விமர்சனம் செய்துள்ளார்.