கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகளும் உள்ளனர். இவர் ஒலி ஒளி நிலையம் நடத்தி வருகிறார்.
இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வேலை பார்த்து வருகிறார். அந்த வாலிபருக்கும் அஞ்சலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
அவர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அஞ்சலியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த ஆண்டு அஞ்சலிக்கு துபாயில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைத்தது.
இதனால் துபாய்க்கு சென்ற அஞ்சலி கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் அந்த வாலிபர் தனது உறவினர்களுடன் அஞ்சலி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.
அதற்கு சத்யபாலனும் ஸ்ரீஜாவும் மறுப்பு தெரிவித்ததால் அந்த வாலிபர் திரும்பி சென்றுவிட்டார். மேலும் மகளும் தன் பேச்சைக் கேட்க மறுப்பதால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீஜா திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்கள் மீதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் அவர்கள் மீது பற்றி எறிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் ஸ்ரீஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சத்திய பாலன், அஞ்சலி, அகிலேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியபாலனும், அஞ்சலியும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். அகிலேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது