சைபர் க்ரைம் எச்சரிக்கை... பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் பெயரில் புதுவகை மோசடி!
Dinamaalai April 13, 2025 11:48 PM

சமூக வலைதளங்களில் சைபர் க்ரைம் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இது குறித்து சைபர் க்ரைம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். 

பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், எழுத்தாளர் சுதா மூர்த்தி, ஆன்மிகவாதி சத்குரு உட்பட பல பிரபலர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை தவறாக பயன்படுத்தி, அவர்கள் பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய வலியுறுத்துகின்றனர். மக்களை மோசடியின் பிசகில் அழுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையில் இறங்கி, ஸ்ரேயா கோஷல் குறித்த தவறான தகவல்களுடன் கூடிய 25 போலி பதிவுகள் மற்றும் 38 மோசடி இணையதளங்களை நீக்கப்பட்டுள்ளது. மோடி மற்றும் சத்குருவின் புகைப்படங்களை வைத்து முதலீட்டை ஊக்குவித்த 18 சமூக ஊடக பதிவுகள் மற்றும் 15 போலி இணையதளங்களையும் அடையாளம் கண்டு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இவ்வகை மோசடிகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, சந்தேகத்துக்குரிய இணையதளங்களை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், ஏமாற்றப்பட்டவர்கள் 1930 என்ற இலக்கத்திலோ அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார் அளித்து வருகலாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.