பயணிகள் அதிர்ச்சி... ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம்... வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!
Dinamaalai April 13, 2025 11:48 PM

நடுத்தர வர்க்கத்தினரின் பொதுப்போக்குவரத்து சேவைகளில் குறைவான கட்டணத்தில் தொலை தூர பயணங்களுக்கு ரயில்கள் தான். இந்நிலையில் ரயில்க்ளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. 

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏ.சி. 2-ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3-ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் தனியாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.