இதுவரை மத்திய அரசு அடுத்தடுத்து எடுத்த அதிரடி நடவடிக்கைகள் விபரம் பின்வருமாறு:
* இந்தியா- பாக்., இடையே, 1960ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
*பாக்., உடனான வாகா- அட்டாரி எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
* வாகா- அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.
* இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்
* டில்லியில் உள்ள பாக்., துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.