இனி பாகிஸ்தான் அணியுடன் போட்டிகள் இல்லை - பிசிசிஐ..!
Newstm Tamil April 25, 2025 10:48 AM

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐசிசி-க்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானுடன் இனி எந்த விதமான தனிப்பட்ட தொடர்களிலும் இந்திய அணி விளையாடாது எனவும், இந்த முடிவில் உறுதியாகஇருப்பதாகவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளுடன் ஐசிசி தொடர்களில் மட்டுமே இனி பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் எனத் தெரிவித்துள்ள அவர், பிசிசிஐ-யின் முடிவுக்கு ஐசிசி ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.