“குழந்தைகளின் அறையை பூட்டிவிட்டு”… சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை… உயிருக்கு போராடிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil April 15, 2025 05:48 PM

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஜில்சன் (42)-லிசா(35) தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய குடும்பத்தில் திடீரென கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மனைவியை கொன்றுவிட்டு ஜில்சன் தற்கொலை செய்யத்திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் குழந்தைகளின் அறையை ஜில்சன் பூட்டிவிட்டார். பின்னர் தன்னுடைய மனைவியை சார்ஜர் ஒயரை கொண்டு கழுத்தை நெறித்து அவர் கொன்றார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக அவர் தன் கையை கிழித்து விட்டு பின்னர் வீட்டிலிருந்த விஷத்தை குடித்தார். இதற்கிடையில் அவர் தன் மனைவியை கொலை செய்வதற்கு முன்பாக நண்பர் ஒருவருக்கு மெசேஜ் செய்த நிலையில் அந்த மெசேஜை அவர் நேற்று தான் பார்த்தார்.

உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு சென்றபோது லிசா பிணமாக கிடந்தார். ஜில்சன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.