கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கிருஷ்ணதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சுபா பாய் (50). இவர் சம்பவ நாளில் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.