உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லலித்பூரில் ராஜதாணி தாபாவுக்கு எதிரே உள்ள கட்சிரௌந்தா அணை பகுதி அருகே கார் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க வேகமாக ஓடுகிறார்.
ஆனால் பேருந்துக்கு எதிரே வந்த காரை கவனிக்காமல் கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் அந்த இளைஞரை சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசியது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இளைஞரை ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அந்த இளைஞரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும், தற்போது அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.