யாராவது சொல்லி இருந்தா எஸ்கேப் ஆகிருப்பேன்…! தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. அப்படி என்னாச்சு…?
SeithiSolai Tamil April 23, 2025 07:48 PM

தாய்லாந்தின் பிரபலமான பி பி தீவுகளில் அமைந்துள்ள மங்கி பே (Monkey Bay) கடற்கரையில் சுற்றுலா பயணமாக சென்றிருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், கடலில் நீந்தும் போது தவறுதலாக சிறிது தண்ணீர் குடித்ததால் கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதிக அளவில் குரங்குகள் சுற்றி வருவதால் ‘மங்கி பே’ எனப் பெயர் பெற்ற இந்த கடற்கரை, சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற இடமாகும். ஆனால் அந்தப் பெண்ணின் அனுபவம் தற்போது பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

“ஆழமற்ற கடற்கரைகளில் நீந்தும்போது கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாராவது என்னை முன்பே எச்சரித்திருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட அனுபவம், மற்றவர்களுக்கு நேரிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவை பகிர்கிறேன்,” என அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த பதிவு 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது. இதற்கிடையில், ஒரு தாய்லாந்து உள்ளூர் பயனர், “நாங்கள் இங்கு வாழ்வதால் எங்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.

ஆனால் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதற்கேற்ப நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “நீண்ட பயணங்களுக்கு முன் சுகாதார விழிப்புணர்வும், பயண இடம் குறித்து முன்னதாக செய்யப்படும் ஆய்வும் மிகவும் அவசியம்” என பல பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.