என்னை லவ் பண்ண மாட்டியா…? மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!
SeithiSolai Tamil April 24, 2025 06:48 AM

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சூர்யா பேசி பழகி வந்தார்.

நாளடைவில் சூர்யா மாணவியை காதலித்துள்ளார். ஆனால் மாணவிக்கு விருப்பமில்லாததால் சூர்யாவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். மாணவியை ஒருதலையாக காதலித்த சூர்யா தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் மாணவி விலகி சென்றதால் ஆத்திரமடைந்த சூர்யா மாணவியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்றுள்ளார். அப்போது மாணவி கத்தி கூச்சலிட்டதால் தப்ப முயன்ற சூர்யாவை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே மாணவிக்கு இரண்டு கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.