அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று ஒரே நாளில் பல்வேறு துறை சார்ந்த வழக்குகளில் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய ஸ்டாலின் மாடல் அரசு.
-டாஸ்மாக் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம்.
-பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில், பொன்முடி மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது.
-சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகனை விடுவித்தது ரத்து, மேலும் வழக்கை விசாரித்து 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
-செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கில், அமைச்சர் பதவி வேண்டுமா?
இல்லை ஜாமீன் வேண்டுமா? திங்கட்கிழமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய திமுக அரசு, மக்கள் மன்றத்தில் குட்டு வாங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளது.