“நாங்க பொறுப்பு…. நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!
SeithiSolai Tamil April 24, 2025 06:48 AM

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – தாரண்யா தம்பதியினர். இவர்கள் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் உறவினரான ஹரிஷ் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார்.

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தை சேர்ந்தவர் சிவராமன். இவர் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் வித்யா ஃபார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரிடம் சிவராமன் , தாரண்யா தம்பதியினர் தொழில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

அதை நம்பிய சிவராமன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1.1 கோடி மற்றும் நவம்பர் மாதம் 45 லட்சம் என மொத்தமாக 1.46 கோடி கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்ட தம்பதியினர் இருவரும் பல மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே சந்தேகம் அடைந்த சிவராமன், தம்பதியினர் இருவர் பற்றி விசாரித்த போது அவர்கள் இதே போல் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. அதனால் சிவராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுமார் தாரண்யா தம்பதியினரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஹரிஷை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் கூறியதாவது, மூவரும் சேர்ந்து பலரிடம் பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் ஒரு லோடு ஆட்டோ, பிஎம்டபிள்யூ கார், தியா கார்னிவெல், டொயோட்டா ஃபார்ச்சூனர், பென்ஸ் நிறுவனக்கார்கள் உட்பட ஒன்பது வாகனங்கள் இருந்தது. போலீசார் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.