பஹல்காம் தாக்குதல் தொடர்பில், பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை மற்றும் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!
Seithipunal Tamil April 24, 2025 07:48 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் பிரதமர் இல்லத்தில் இன்று ஏப்ரல் -23 மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

புதுடில்லியில் உள்ள பிரதமர் அரசு இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

குறித்த ஆலோசனைக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதன் போது பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய காஷ்மீர் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, உளவு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணபை்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.