நாளை அட்சய திருதியை ... இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
Newstm Tamil April 29, 2025 06:48 PM

நாளை அட்சய திருதியை என்பதால் தங்கம் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று தங்கத்தின் விலையில் சற்றே உயர்வு காணப்படுகிறது. நேற்று விலை குறைந்த ஆபரணத் தங்கம் இன்று (ஏப்.29) சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 40 உயர்ந்து ரூ.8980 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.71840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை நாளில் விலை நிலவரம் மாறலாம் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சவரன் ரூ.58 ஆயிரத்திற்கு விற்ற தங்கம் விலை தற்போது 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் தங்கம் விலை இப்படி தடாலடியாக அதிகரிக்க வில்லை. உதாரணத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ. 35,936க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே கடந்த 2022 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் ஒரு சவரன் ரூ.40,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டால் ஒரு ஆண்டுக்கு 4,700 ரூபாய் தான் கூடியிருந்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.