பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா…? “அதற்கு அவர் கேட்ட சம்பளம் இருக்கே….” வாயடைத்து போன தயாரிப்பாளர்….!!
SeithiSolai Tamil April 30, 2025 02:48 AM

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா கடைசியாக டெஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு டெஸ்ட் திரைப்படம் வெற்றி பெறவில்லை.

தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2, டாக்சிக், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் அனில் ரவி பிடி இயக்கத்தில் சிரஞ்சீவி ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான பிரீ புரோடக்சன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என அவரிடம் பேசி உள்ளனர். அந்த கதையை கேட்ட நயன்தாரா தனக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்டாராம்.

இதுவரை நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்கு அவர் 18 கோடி சம்பளம் கேட்பதால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.