பொது இடங்களில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்பவரா நீங்கள்..? அப்போ உஷார்..!
Newstm Tamil April 30, 2025 04:48 PM

பொது இடங்களில் பணப் பரிமாற்றம் செய்வது குறித்து எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வைப் வசதியை பயன்படுத்தி பொது இடங்களில் பண பரிவர்த்தனை மேற்கொண்ட வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையம், ஏர்போர்ட், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இலவச வைஃப் வசதி வழங்கப்படுகிறது. இந்த இலவச வைஃபைகள் பெரும்பாலும் பாதுகாப்பனாதாக இருப்பதில்லை என ஒன்றிய அரசின் CERT-In தெரிவித்துள்ளது. இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவான இது, வைஃபை வசதிகளை பயன்படுத்துவதில் கவனம் தேவை என தெரிவித்துள்ளது.

அதாவது சைபர் குற்றவாளிகள் பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை சேவையை ஹேக் செய்யலாம். இதன் மூலமாக பயனர்களின் தரவுகள் மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை திருடலாம். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தெரியாமல் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே பணப்பரிவர்த்தனை, ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றை பொது இடங்களில் இலவச வைஃபை வசதியை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

மேலும், இலவச வைஃபை பயனபடுத்தும் போது பாஸ்வோர்ட் எதையும் பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பு எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தமில்லாத லிங்குகளை கிளிக் செய்யாமல் இருக்குமாறும், ஆன்லைன் கணக்குகளுக்கு வலுவான பாஸ்வோர்ட்களை பயன்படுத்துமாறும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.