பிரபல படத்தயாரிப்பாளரான எஸ்எம்.உமரின் நெருங்கிய நண்பர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவரது நாடகம் ஒன்றைத் தன்னோட ஊரான காரைக்காலில் நடத்தலாம் என்று விரும்பினாராம். அதனால் அவரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அதற்கு ‘தேவ அசுர போராட்டம் என்ற நாடகத்தை உங்க ஊருல போடுறேன். எனக்கு நீ 500 ரூபா கொடுத்தா போதும்’னு சொன்னாராம் நடிகவேள்.
அந்த நாடகம் பற்றி உமர் விளம்பரம் செய்தார். தேவ அசுர போராட்டம்னு சொன்னதுமே அது ஆட்சியருடைய மனதை இந்த நாடகம் புண்படுத்தும்னு தெரிந்தது. அதனால் போலீஸ் உமரைத் தேடி வந்தது.
இந்த நாடகத்துக்கு அனுமதி கிடையாது என்றனர். என்ன பண்றதுன்னே உமருக்குத் தெரியல. எம்ஆர்.ராதாவிடம் போய் சொல்ல ‘அப்படியா லட்சுமிகாந்தன் நாடகத்தைப் போடுறேன்’னாரு. அப்போது அதைப் பல முறை பார்த்ததால மக்கள் கூட்டம் வரல. முதல் 2 காட்சிகளை லட்சுமி காந்தன் நாடகமா போட்ட எம்ஆர்.ராதா 3வது காட்;சியில் தேவ அசுர போராட்டம் நாடகத்தைப் போட்டார். இப்ப உமருக்கு என்ன செய்றதுன்னு தெரியல. நீங்க நாடகத்தை போட்டுட்டுப் போயிடுவீங்க.
நான் இந்த ஊருல இருக்கணும். அதனால நீங்க லட்சுமிகாந்தன் நாடகத்தையே போடுங்கன்னு சொன்னார். நீங்க வேணா இங்கே இருந்து போங்க. நான் நாடகத்தை முடிச்சிட்டுத் தான் போவேன்னு சொல்லிருக்கார். போலீஸ்சும் நாம எதுக்கு சாட்சியா இருக்கணும்னு அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டாங்க. நாடகம் முடிஞ்சது. கூட்டம் இல்லாததால வெறும் 200 ரூபாய் தான் கலெக்ஷன் ஆனதாம்.
உமர் எம்ஆர்.ராதாவிடம் சொல்ல அதனால் என்ன 200 ரூபாயைக் கொடுன்னு வாங்கிக் கொண்டாராம். வெளி உலகில் அடாவடியாகத் தெரிந்தாலும் அவர் எந்தளவு நேர்மையானவர் என்பதற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் சாட்சின்னே சொல்லலாம்.